காடுகள் கடல் வானம் ,மலை எல்லாம் இயற்கையின் சிரிப்பு, காடு கொன்று நாடக்கினோம் ,நந்தவனங்களை உருவாக்கினோம்,மலையை குடைந்து கோயில் கண்டோம் .வானில் பறந்தோம் .விண்ணில் மிதந்தோம். கடல் கரையை காண கப்பல் விட்டோம். புவியை தோண்டி நீர் எடுத்தோம் ,வளம் பல கண்டோம்
ஆசை அதிகமானதால் அகிலத்தை ஆய்ந்தோம் .விண்ணில் விரைந்தோம்.சிகரங்களை தொட்டோம் அறியா பிரபஞ்ச ஞானங்களை , அறிவதில் ஆர்வமாய் இருந்தோம் .
வீடு கட்டி விற்றது ஆசை. இடித்து அடுக்குமாடி கட்டி வாடகைக்கு விட்டது ,பேராசை, சம்பளம் வாங்கியது ஆசை. கிம்பளம் வாங்க சட்டை எங்கும் பை வைத்துக்கொண்டது பேராசை
ஆறுகள் ஏரி யாய் மாறி பின் குளம் என்றும் குட்டை என்றும் சுருங்கியது . மனிதனுக்கே இடம் இல்லை இந்த பறவைகள் ஏன் அலைகின்றன.
பதில் தெரிந்தால் எனக்கு மெயில் செய்யவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக