நல்ல சினிமா
சமிபத்திய வெளியீடுகளான இரண்டு திரைப்படங்களை பற்றி பேச வேண்டும் என்று தோன்றியதால் கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழிக்க வேண்டியாகிவிட்டது.
Budda theri pap..! என்ற அமிதாப் படம்."கிழவன் உன் அப்பன்..!" என்கிற நேரடி மொழி மாற்றத்தை விட கிழவன் உன் அப்பன் தான்..! என்பது கிட்டதட்ட நல்ல புரிதலை தரும். தேரீ மா, தேரீ பாப், என்பவை வசை சொல்.சில சந்தர்பங்களில் இது கெட்ட வார்த்தை மாதிரியாக கூட உபயோகிகப்படும்.சரியாக சொன்னால்,சாமான்யர்களின் நடை முறை சொல்வழக்கு.பூரீ ஜெகன்னாத் இயக்கிய இப்படம், அமிதாப்பின் அன்றைய இன்றைய ரசிகர்களை விசிலடிக்க வைக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட படம்.Angry young man அமிதாப்பை யாராவது ஏ கிழவா என்றால் அவர் தரும் வசை சொல் தான் படத்தின் தலைப்பு.அவர் அதை சொல்லி சொன்னவரை அடித்து சண்டை செய்வார் அல்லது சொன்னவளை காலாய்த்து, பாடி ஆடுவார்.ஆட்டம்,பாட்டம், கொண்டாட்டம் தான்.அமிதாப் மிகவும் speed.and fast.
காமெடி கலந்தசெண்டிமெண்டும், ,கண்ணிர் கலந்த நகைசுவையும் , அன்று முதல் இன்றுவரை அமிதாப்பின் ஆயுதங்கள்
தெலுங்கு போக்கிரியை இயக்கயவர் என்பதாலோ என்னவோ(தெலுங்குதான் அசல் -மூலம்) நிறைய காட்சிகள் போக்கிரியை நினவுக்குக் கொண்டு வருகிறது.ஆதவன் திரை படத்தில் மகன் தந்தையை கொல்ல ஏவப்பட்ட hired gunda இதில் தந்தை மகனை கொல்ல ஏவப்பட்ட hired gunda.இரண்டு படத்திலும் இடை வேளை சமயத்தில் தான் இந்த உண்மை நமக்கு தெரிவிக்கப்படும்.முடிவில் இருவரும் போராடி சேதாரம் குறைவாய் ஆக, செய்கூலியை விட வருவாய் அதிகமாய் வரும் வகையில் இறுதியில் சுபமாக்கிவிடுவார்கள்
அமிதாப்பின் சமீபத்திய master piece Paa, & Kaakki யும் தான்.இது இரண்டையும் நம்மவர்கள் ஏனோ முயற்சிக்கவில்லை.சிவாஜி அவர்களுக்குத்தான் Paa,ரோல் பொருந்தும்,செய்ய முடியும் கூட.கமல்க்கு உருவ அமைப்பு பொருத்தமாய் இருக்காது. இருந்தாலும் முயற்சிக்கலாம்.Paa வில் அமிதாப் உண்ர்வு பூர்வமான நடிப்பு குரல்,நடை எல்லாம் இயல்பாய் இருக்கும் எங்கும் நாடக தனம் இருக்காது.
அமிதாப் என்ற இளைங்ஞனை எப்படி உபயோகித்துக் கொள்ளுவது என்கிற விஷயம்.நம் இயக்குநர்கள் நன்கு அறிவார்கள்
Budda apna pap..!
இரண்டாவது படம்-தெய்வத் திருமகள்-தலைப்பு தான் செண்டிமெண்டான மரபு வழி சிந்தனை
.ஐந்து வயது IQ உள்ள தந்தைக்கும்,,ஐந்து வயது மகளுக்கும் இருக்கும் நேசம் பற்றியது தான் இந்த படம்..அப்பா என்ற சித்திரம் நமக்குள் நண்பனாய்,மந்திரியாய்,நல் ஆசிரியனாய் என்று பல எண்ணங்களை தோற்றுவிக்கும்;.மன வளர்ச்சி இல்லா அப்பா வாழ்வியலை புரிந்த மகள் இவர்களை பிணைக்கும் கயிராய் பாசம், பரிவு இருந்தாலும்,மெல்ல அது உலகியலைத் தாண்டிய ,அன்பு என்ற அண்டவெளியில் பயணிக்கும் நிலையை இயக்குனர் நம் மண் வாசனையோடு சொல்லி இருக்கிறார்.
அப்பா வாந்தாச்சு, பாப்பா வந்தாச்சு,என படுத்து விளயாடும் இரண்டு குழந்தைகள்,தான் உணர்ந்து,கிருஷ்னா வந்தாச்சு, நிலா வாந்தாச்சு.என ஒரு படி மேல் ஏறி ,பின் நிலாவை ஊடகமாக்கி தாங்களின் உள்ளக் கிடக்கையை பறிமாறிக் கொண்டு, பிரிவு என்பது பௌதீக நிலைக்குத்தான்,உயிர்களின் சம்பாஷனைக்கு அல்ல என்று அறிந்து., இறுதியில் புற வடிவங்கள் உலக வயப்பட்டது,அக வயப்பட்டது அன்பு என தந்தை ஞான முருவதை மையக்கருத்தாய் கொண்டது இந்த படம்.நாம் சஞ்சரிப்பது போராசை கொண்ட மனித சராசரி உலகுக்கு அப்பாற்பட்டது என்பதை உணர்த்தும் வகையில் அப்பவும் மகளும் நடித்துள்ளார்கள். இறுதி கோர்ட் சீனில்,.அப்பாவும் மகளும். அவர்களுக்குள் இயங்கும் ஒரே உலகை குறைந்த வசனத்துடன் தங்களின் நடிப்பாற்றலால்,மூலம் நமக்கு வெளிக்காட்டும் சமயங்கள் மிகவும் நெகிழ்சியான தருணங்கள்..
.மன வளர்ச்சி குன்றிய தகப்பனாய் விக்ரமும், ஐந்து வயது செல்லமகளாக சாராவும் வாழ்ந்திருக்கிறர்கள்.படதின் ஒரு ஃப்ரேமில் கூட இது சினிமா, நடிப்புத்தான் என்கிற எண்ணத்தை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை.சாரா என்ற அந்த நாலு வயது கவிதை,நவில் தொறும் நூல் நயம் என்ற குறளை நினைவு படுத்துவதற்கான காரண்ம் அவள் உயரமா இல்லை, பார்க்க பார்க்க, புது புது பரிமாணங்களில் மிளிறும் அவள் நடிப்பா.புரியவில்லை. அன்பு வசப்பட்ட சாக்லேட் கம்பெனி முதலாளி, தன்னையே சந்தேகிக்கும் வேன் டிரைவர், தட்டி விடும் அவன் அசிஸ்டெண்ட்,கேஸுக்கு அலையும் sub-junior.கோர்ட் வளாகத்தில் chamber உள்ள junior, கண்டிப்பான ஸ்கூல் கரெஸ்பாண்டெண்ட் ,ஞான கிறுக்கன் சீனியர் வக்கில் பாஷ்யம், எல்லாம் இயல்பான மனிதர்கள்.
விக்ரம், சாரா இவர்களின் குழந்தை தனமான அன்பு உலகத்திற்கும் அதற்கு முற்றிலும் புறம்பான அனுக்க்ஷா, ஒய்.ஜி.மகேந்திரனின் வெறுமையான தந்தை மகள் உலகத்தையும் இணையாக காட்டி இருப்பது இயக்குநரின் கற்பனை திறனுக்கு நல்ல உதாரணம்.
2001ல் Jessie Nelson இயக்கி Sean Pean& Dakoty Fanning அப்பா மகளாய் நடித்த i am sam என்ற அமெரிக்க படத்தின் நினைவுகள், சில சந்தர்பங்களில்வருகிறது.
developed mental disablity உள்ள Sean Pean நடிப்பும் அவரது நண்பர்கள் கூட்டமும் சில சமயங்களில் நினைவுக்கு வந்தாலும் அதே வேறு உலகம். சில பாத்திரங்கள் மட்டுமல்லாமல் ,சில சம்பவங்கள், ஏன் சில வசனங்களில் கூட சாம்'மின் சாயல் தெய்வமகளில் தெரிகிறது. (சாராவுக்கு செருப்பு வாங்கிய பின் பலூன் பிடித்து தெருவை கடக்கும் நண்பர்கள், படிகளீல் தடுக்கி விழும் சாம்., உன்னால் எத்தனை வயது வரை மகளை வளர்க்க முடியும்.. ஐந்து வயது வரை,...பத்து வயது வரை .. அல்லது பதினைந்து வயது வரை.. பின்னர்...என்று கோர்ட்டில் கேட்க்கும் வசனம்)
இருந்தாலும் இது ஒர் அற்புத படைப்பு.மதராஸ பட்டிணம், ஆரம்பத்தில் டைட்டானிக்கை நினைவு படுத்தினாலும், போக போக இது வேறூலகை நோக்கிய பயணம் என்று புரிகிறது.
இரண்டு படத்திற்கும் உள்ள ஒற்றுமை கிழவியின் கடந்த காலத்தை திருப்பிப் பார்க்கும் சோகமும், கடந்த காலத்திற்கே நம்மை அழைத்து செல்லும் இயக்குனரின் திறமையும், கற்பனை வளமும்
அதை போலவே i am sam க்கும் தெய்வமகளுக்கும் வேறுபாடுகள் நிறைய உண்டு. developed mental disablity இருக்கும் sam மற்றும் அவனது நண்பர்கள் உலகமும்,தந்தை மகள் அன்பு.அதை அங்கிகரிக்க மறுக்கும் legal battle ம் தான் பொதுவானது.--கேஸ் தேடி தங்களை தங்கள் திறமையை நிருபிக்க முயலும் இளம் வக்கில்களின் மாறுபட்ட வாழ்க்கை.சினியர் வக்கிலின் ஆடம்பர உலகம். மண்வாசனை கமழும் அப்பா,மகள் உறவு. அது வேறு வேறு பரிமாணங்களில் அன்பாய் மலரும் அழகு. தமிழ் திரைக்கு முற்றிலும் புதிய கோர்ட் சீன்கள். வாய் இல்லாதவரை நசுக்கும் வசதியானவர்கள் சட்டத்தை விலைக்கு வாங்க நினைக்கும் அவர்களின் ஆணவ போக்கு.நெஞ்சைத்தொடும் பாடல் வரிகள்.
பட்டதில் ரசிக்க முடியாத விஷயம் எது என்றால் அது, மெகா சீரீயல் தனமாய் சீனியர் வக்கில் போடும் திட்டங்களும்,அதை முறியடிக்க ஜுனியர் போடும் conter plan களும்..
அற்புதமான திரைகதை-சிறப்பான திரைகதை க்கு இது ஒரு உதாரணம்.
ஆடியன்ஸின் அத்தனை கேள்விகளுக்கும் விடை தந்த வண்ணம்.நம் முன் ஒரு புதிய உலகத்தை கோடு கோடாய் சுவாரஸ்யமாய் வரைந்து காட்டி உள்ளார் இயக்குநர்.இறுதியில் இயக்குநர் காட்டிய சித்திரம் நமக்கு பிரமிப்பை தருகிறது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக