6 ஆகஸ்ட், 2012

" ஜாலியன் வாலா பாக்"


                                                             இந்திய சுதந்திர போரட்டத்தில் உயிர் இழந்த பாடப்படா வீரர்கள்(UnSunk Heros) ஏராளம். அதில் இவர்களுக்கும் ஒரு இடம்.

ஜாலியன் வாலா பாக், சீக்கியர்களின்.புனித ஸ்தலமான அமிர்சரஸ்- பொற்கோவில் அருகில் அமைதுள்ளது.டெல்லியில் இருந்து புகை ரதத்தில் செல்லலாம்.
1919ல் ஏப்ரல் மாதம் 13 ஆம் நாள் அந்த கொடூர சம்பவம் இங்கே நிகழ்ந்தது.சுமார் 15,000 முதல் 20,000 வரை பொது மக்கள் இந்த பூங்காவில் ஒரு பொதுக்கூட்டத்தில் பங்கேற்க்க கூடி இருந்தனர்.அதில் குழந்தைகளும் பெண்களும் இருந்தார்கள்.
                                                           
                                     ஜென்ரல் டயர் என்ற ஆங்கிலேய படை தளபதி.அந்த அப்பாவி மக்கள் மீது குண்டு மழை பொழியச் சொல்லி தன் சைணிய வீரர்களுக்கு உத்திரவு இட்டான்.சுமார் 1750 ரவுண்டுகள் சுடப்பட்டது.1500 அப்பாவிகள் உயிர் இழந்தனர்.              

இரக்க மில்லாமல் கண்முடித்தனமாய் காக்கை குருவிகளை சுடுவது போல் சுட்டார்கள்.நிராயுத பாணியாய் சொற்பொழிவு கேட்க வந்த அப்பாவிகளுக்கு கிடைத்தது தூய சொல் மாரி அல்ல..துப்பாக்கி தோட்டாக்கள் மழை.


                                                                     
ரௌலட் சட்டத்தை இந்தியர்கள் கடுமையாய் எதிர்த்ததால் ஆங்கிலேய அரசுக்கு டயர் தன் சார்பில் செலுத்திய நன்றி விசுவாசக் காணிக்கை தான் இந்த 1500 அப்பாவி இந்திய உயிர்கள்.
அன்று இந்த பூங்காவிற்குள் நுழைய ஒரு குறுகலான சந்து மட்டும் தான் இருந்தது.அதன் வழியே உள் நுழைந்த கையில் துப்பாகி ஏந்திய ஆங்கில படை வீரர்கள் வழியை அடைத்து கொண்டு வரிசையாய் நிற்கிறார்கள்.
                                         
                       பொதுக்கூட்டம் நடந்த படி இருக்கிறது.துப்பாக்கி ஏந்தி குறி பார்க்கும் ஆங்கில படை வீரர்களை கண்டதும் மக்கள் மனதில் பய உணர்ச்சி;பதற்றம்;எதிர்பாராத நேரத்தில் குண்டு மழை பொழிய ஆரம்பித்துவிட்டது.அந்த குழப்பத்தில் மக்கள் திக்கு திசை தெரியாமல் ஓடுகிறார்கள்..காலடியில் வீழ்ந்து கிடப்பது குழந்தையா குமரியா, கிழவர்களா என பார்க்க முடியா பயத்தில்,அவர்களை மிதித்துக்கொண்டும்,இடித்துக் கொண்டும் இலக்கு இல்லாமல் விரைந்தனர்.ஓடிய அவர்களுக்கு ஒரே நம்பிக்கை எதிர் தெரிந்த காம்பவுண்ட் கட்டை சுவர்தான். கட்டை சுவரில் ஏற வசதியாய் அருகே குட்டி சுவர். குட்டி சுவராய் தோன்றிய அது ஒரு கேணியின் கைபிடி கட்டை சுவர். பதற்றத்தில் விரைந்தோடிய அவர்களுக்கு அந்த துன்பக் கேணியில் மரணம் காத்திருந்தது
                                               
குண்டுக்கு பலியானதை விட அந்த கேணியில் வீழ்ந்திறந்தவர்கள் ஏராளம்.

                                 அனைத்து தரப்பினரும் இந்த வன் கொலைக்கு கண்டனம் தெரிவித்தனர்.ரவிந்திர நாத டாகூர் அவர்கள் தனக்கு ஆங்கில அரசு தந்த knight-Hood  பட்டத்தை திருப்பி தந்து விட்டார்.

If we practice and eye for an eye and a tooth for a tooth, soon the whole world will be blind and toothless.

                                                                                                                                    - Mahatma Gandhi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக